Friday, April 26, 2019

ஆட்சியை தக்கவைக்க அதிமுகவுக்கு எத்தனை இடங்கள் வேண்டும்..?




சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில், தற்போது 212 பேர் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 212ல், அதிமுக கூட்டணியில் 114 எம்.எல்..க்கள் இருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் 97 பேர் இருக்கின்றனர். தேர்தல் முடிவிற்கு பின்னும் அதிமுக ஆட்சி தொடரவேண்டுமெனில், அவர்கள் 118 இடங்கள் பெறவேண்டும் அதாவது 4 இடங்கள் வெல்லவேண்டும். ஆனால் இந்த 4 இடங்களும் போதாது.

 ஏனெனில், கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதேநேரம் அதிமுகவிற்குள்ளேயே இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்..க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 109 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 9 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில் இருந்தது.

தற்போது, கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்..க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரியுள்ளனர். இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக குறையும். அப்படியானால் அதன் பெரும்பான்மை அளவு தற்போது 116 இருந்தாலே போதும். தற்போது அதிமுகவிற்கு தேவையானது 8 உறுப்பினர்கள் மட்டுமே.

 தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு குறைவு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒருவேளை இந்த மூவரும் ஆதரவளிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறையாகிவிடும் என்ற அச்சம். இதனால்தான் இவர்களை முன்னரே தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.

Saturday, April 20, 2019

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் என்ன செய்யலாம்..?





வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் போனவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கங்களை கோரவும், அதன் மூலம் நீதிமன்றத்துக்கு சென்று இழப்பீடு கோரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் சிலர் வாக்களிக்க முடியாமல்போனது. வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் வாக்களிக்க முடியாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோல், தமிழகம் முழுக்க பரவலாக பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் பிரச்சினை எழுந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாதவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய விளக்கங்களை கோரி, நீதிமன்றங்களில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரவும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழியுள்ளது.
எவ்வித காரணமும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியிருந்தால், அது அரசுத்துறை அதிகாரிகளின் சேவை குறைபாடாகும். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வாக்காளர் ஒருவர் கோரலாம்.
வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை கோரலாம். இதற்கான செலவு 10 ரூபாய்தான்.
அவ்வாறு தகவல்களை கோரும்போது அந்த மனுவில் இடம்பெற வேண்டிய கேள்விகள்:நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர் எண் நீக்கப்பட்டுள்ளது. நீக்கம் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் படிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் நகல் தருக. பெயர் எந்த தேதியில் நீக்கப்பட்டுள்ளது. தேதி, மாதம், வருடம் தருக. வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணம் அடங்கிய விவரம் மற்றும் அதன் நகல் தருக. உள்ளிட்ட தகவல்களை கேட்க வேண்டும்.
வழக்கு தாக்கல் செய்யலாம் தகவல்கள் கிடைத்ததும் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள், ஆவணங்களின் அடிப்படையில் தவறுதலாக மற்றும் போலியான ஆவணங்களை, போலியான தகவல்களை கொடுத்து உங்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்து, பெயர் நீக்கம் செய்த அரசு அதிகாரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
மனித உரிமை மீறல்பெயர் நீக்கம் செய்த அதிகாரி மீது மனித உரிமை மீறல் செய்ததற்கு இழப்பீடு கோரியும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் எடுத்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதியை தடுக்க முடியும்.



Monday, April 15, 2019

வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகள் என்னென்ன ?




1) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 12.00 மணிக்கு முன்பதாக தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பணிக்கு சென்று சரியான வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

2) வாக்குச்சாவடியை சென்றடைந்தவுடன் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடத்த நடத்த தேவையான தேவையான உபகரணங்கள் இருப்பதை இருப்பதை உறுதி உறுதி செய்து கொள்ள வேண்டும். வேண்டும். இதற்காக இதற்காக வாக்குச்சாவடி வாக்குச்சாவடி நிலை அலுவலர் /கிராம நிருவாக  அலுவலர் /கிராம உதவியாளர் ஆகியோரின் ஆகியோரின் உதவியை கேட்டுப் பெற வேண்டும்.

3) மண்டல அலுவலர் (Zonal Officer) வந்தவுடன் தேர்தல் பொருட்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலின்படி சரிபார்த்து பெற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்க வேண்டும்.

4) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரம் ஆகியவை உங்கள் வாக்கு சாவடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தானா என்பதற்கு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திர முகவரி அட்டைகளை (ADDRESS TAG) சரிபார்க்கவும்.

5) அழியாத மை (Indelible Ink) வாக்காளர்கள் வாக்களித்தமைக்கு அடையாளமாக வைக்கப்படும் அழியாத மை 700 வாக்காளர்களுக்கு ஒரு குப்பியும் அதற்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்கு சாவடிக்கு இரண்டு குப்பியும் வழங்கப்படும். மேற்படி குப்பிகளை அதற்கென வழங்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கிண்ணத்தில் மணல் நிரப்பி அதில் அசையாமல் இருக்கும் வண்ணம் வைக்கப்பட வேண்டும்.

6) வாக்குச் வாக்குச் சாவடியின் சாவடியின் வெளியே வெளியே 100 100 மீட்டர் மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றளவுக்குள் எந்தவிதமான எந்தவிதமான அரசியல் அரசியல் விளம்பரங்களோ, விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

7) வாக்குச் சாவடிக்குள் எந்தவொரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதை உறையிட்டு முழுமையாக மூடிவிட வேண்டும்.

8) இதர வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் வந்துள்ளனரா என உறுதி செய்து கொள்ள வேண்டும். எவரேனும் வராவிடில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ரிசர்வ் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்பட வேண்டும்.

9) வாக்குப்பதிவு செய்யும் அடைப்பு பகுதி (Voting Compartment Area) போதிய வெளிச்சம் உள்ள பகுதியாகவும், வாக்களிக்கும் இரகசியத்தை காக்கும் பொருட்டு ஜன்னல் மற்றும் கதவு பகுதியிலிருந்து விலக்கியும் அமைந்திருக்க வேண்டும். VVPAT இயந்திரத்தின் மீது நேரடியாக விளக்கின் ஒளிபடுமாறு அமைந்திருத்தல் கூடாது.

10) குறுக்கு அம்புக்குறி ரப்பர் ஸ்டாம்ப் (Arrow Crossmark Rubber Stamp) மற்றும் உலோக முத்திரைகள் (METAL SEALES) மற்றும் உங்கள் வாக்குசாவடிக்குள்ள Distinguished Mark ஆகியவற்றை சரிபார்க்கவும்.

11) வாக்குச்சாவடியில் பயன்படுத்திட வாக்காளர் பட்டியலின் மூன்று நகல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு படி-1, இதர படிகள்-2 (Marked Copy-1, Reference Copy-2) இதில் அனைத்து பக்கங்களும் விடுதலின்றி இடம்பெற்றுள்ளதா எனவும், துணைப் பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளதா எனவும், அனைத்து பக்கங்களும் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா எனவும் சரிபார்க்க வேண்டும்.

12) வழங்கப்பட்டுள்ள பச்சைதாள் முத்திரை (Green Paper Seal) மற்றும் ஒட்டுதாள் முத்திரை (Strip Seal) ஆகியவற்றில் உள்ள எண்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கவும்.

13) ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 20 எண்ணம் ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும், அவை அவற்றின் எண்களோடு ஒப்பிட்டு சரியாக உள்ளனவா, அவற்றின் பின்புறம் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு அல்லது Tendered Ballot Paper என அச்சடிக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.

14) உங்களிடம் வழங்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களை நீங்களே நீங்களே பாதுகாப்பாக பாதுகாப்பாக வைத்திருக்க வைத்திருக்க வேண்டும். வேண்டும். வாக்குப்பதிவு வாக்குப்பதிவு அலுவலர்கள் அலுவலர்கள் வாக்குச்சாவடியிலேயே வாக்குச்சாவடியிலேயே தங்க தங்க வேண்டும். வேண்டும். எக்காரணம் எக்காரணம் கொண்டும் கொண்டும் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயந்திரங்களை வெளியில் வெளியில் எங்கும் எங்கும் எடுத்துச் எடுத்துச் செல்ல செல்ல அனுமதியில்லை. அனுமதியில்லை.

15) வாக்குச்சாவடிக்கு வெளியே, வாக்குச்சாவடியின் பரப்பு மற்றும் அங்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் வசிப்பிடம் குறித்த பிரிவுகள் அடங்கிய அறிவிப்பை அனைவருக்கும் நன்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும். இதே போல் படிவம் 7Aல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒட்டி வைக்க வேண்டும்.


இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...