Thursday, April 4, 2019

வாக்குச்சாவடி முகவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னென்ன?





மாதிரி வாக்குப்பதிவு நேரம் : காலை 6.00 மணி
வாக்குப்பதிவு நேரம் : காலை 7.00 மணி முதல் 6.00 மணி வரை
தேர்தல் பணியில் Nடுபட்டிருக்கும் அனைத்து அலுவலர்களும் 1951ம் ஆண்டின் மக்கள்பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 26-ன் கீழ் தாங்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளீர்கள்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும், பொறுப்புகளும்
1. வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் நண்பகல் 12.00 மணிக்குள் -வாக்குச்சாவடிக்கு சென்றடைய வேண்டும்.

2. வாக்குப்பதிவிற்கு தேவையான தேர்தல் பொருட்கள்இ வாக்குப்பதிவு யேந்திரங்கள் மண்டல அலுவலர்கள் ஒப்படைக்கும் போது பட்டியல்படி சரியாக உள்ளதா?என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

3. வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் காவலர்கள்வருகைபுரிந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

4. வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) கட்டுப்பாட்டு கருவி (Control Unit), VVPAT ஆகியவை வைக்கப்படும் இடத்தில் போதுமான அளவு வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5. வாக்குப்பதிவு அலுவலர்களின் இருக்கைக்கு பின்புறம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான இருக்கையினை அமைக்க வேண்டும்.

6. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்களின் விவரம், வாக்குச்சாவடி பரப்பு, போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஆகியவை நன்கு தெரியும் வகையில் ஒட்டப்பட வேண்டும்.

7. வாக்குச்சாவடியின் 100மீ சுற்றளவிற்குள் எந்தவித அரசியல் விளம்பரங்களோ, 200மீ சுற்றளவிற்குள் அரசியல் கட்சி அலுவலகங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

8. வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து படிவம்-10- பெற்று, ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஒருமுகவர் மற்றும் ரேண்டு மாற்று முகவர்களை நியமிக்கலாம்.

9. வாக்குச்சாவடிக்குள் ஒரே சமயத்தில் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்குச்சாவடி முகவர் மட்டுமே, இருக்க வேண்டும்.

10. வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்களின் சின்னங்கள் தெரியும் வகையில் அடையாள அட்டை ,உடை அணிந்து வருவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

11. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குப்பதிவு ரகசியத்தை காத்திடுதல் குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதிமொழியை படித்துக் காட்டி கையொப்பம் பெறவேண்டும்.

12. குறித்த நேரத்தில் (காலை 7.00 மணி) வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும்.

13. வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் விவரம்:-

1).வாக்காளர்கள்  2).வாக்குப்பதிவு அலுவலர்கள் 3).வேட்பாளர்கள் 4).அவர்களது முகவர்கள் 5).வாக்குச்சாவடி முகவர்கள் 6).வாக்காளருடன் வரும் அவரது கைக்குழந்தை 7).கண்பார்வையற்ற மற்றும் பிறர் உதவியின்றி நடக்க அல்லது வாக்களிக்க இயலாத வாக்காளருக்கு உதவிக்கு வரும் ஒரு நபர் 8).தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை பெற்றவர்கள்.

14. புகைப்படம்,வீடியோ எடுக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்களை தவிர பிறரைஅனுமதிக்க கூடாது.

15. தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு Mobile App மூலம் அனுப்பப்பட வேண்டிய அறிக்கைகளை அனுப்ப வேண்டும்.

16. வாக்களிக்க வரும் வாக்காளரின் அடையாளம் குறித்து முகவர் எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அது எதிர்க்கப்பட்ட வாக்கு(Challenged Votes)) எனக் கருதி அந்த முகவரிடம் ரூ.2/- வசூலித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணையில் எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டால் கட்டணத்தை முகவரிடம் திருப்பி செலுத்தி விட்டு, அந்த நபரை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். நிரூபிக்கப்படாவிடில் அவரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

17. ஒரு வாக்காளரின் வாக்கை ஏற்கனவே எவரேனும் பதிவு செய்துவிட்டதாக தெரியவந்தால் தற்போது வாக்களிக்க வந்த வாக்காளரின் அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து அவரை ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு (Tendered Ballot Paper)  மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அவரை நுஏஆ-ல் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. இதனை தனியே கணக்கு வைத்து வாக்குப்பதிவு முடிந்ததும் தனி உறையில் (படிவம் 17B) இட்டு சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

18. ஒரு வாக்காளர் 17(A) பதிவேட்டில் பதிவு செய்து அவருக்கு அழியாத மை வைத்த பின்னர்அவர் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் விதி 49(O)ன் படி 17(A) பதிவேட்டின் குறிப்பு கலத்தில் Refused to Vote அல்லது Left without Vote என எழுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையொப்பமிட்டு அதன் அருகில் வாக்காளர் கையொப்பத்தினையும் பெற வேண்டும்.

19. வாக்களிக்கும் ரகசியத்தை மீறினால் விதி 49M-ன்படி அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் 17A பதிவேட்டின் குறிப்பு கலத்தில் Not Allowed to Vote, Voting Procedure violating என குறிப்பிட்டு அவரை வாக்குச்சாவடியை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டும்.

20. வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6.00 மணிக்கு வாக்களிக்கும் வரிசையில் வெளியில் நிற்கும் கடைசி வாக்காளருக்கு .எண்.1 கொண்ட (Token) சீட்டு வழங்குவதை ஆரம்பித்து, முதலில் நிற்பவர் வரை சீட்டுகள் (Token) வழங்கி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

21. தேர்தல் பணிச்சான்று ((EDC) மூலம் வாக்களிக்கும் அலுவலர்கள் விவரங்களை வாக்காளர் பட்டியலின் குறியீட்டு நகலிலும் ((Marked Copy) 17A பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுவதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்குகளின் எண்ணிக்கையினை Presiding Officer Diary மற்றும் படிவம் 17C மொத்த வாக்காளர்கள் கலத்தில் குறிப்பிட வேண்டும்.

22. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்காளர் பட்டியல், 17A பதிவேடு, கட்டுப்பாட்டு இயந்திரம்(Control Unit) ஆகியவற்றில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு முகவர்கள் முன்னிலையில் Control Unit)-ல் உள்ள Close Button-- அழுத்தி வாக்குப்பதிவினைமுடிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...