Friday, March 29, 2019

தேர்தல்-துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் முதலானவற்றை அச்சிடுவதற்கான வரையறைகள்




தேர்தல்-துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் முதலானவற்றை அச்சிடுவதற்கான வரையறைகள்

அச்சக உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளரது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடாமல் உள்ள எந்த ஒரு தேர்தல் துண்டுப் பிரசுரத்தையோ () சுவரொட்டியையோ யாரும் அச்சிடவோ அல்லது வெளியிடவோ அல்லது அதற்கு காரணமாகவோ இருக்கக் கூடாது.

 நபர் எவரும் கீழ்கண்ட காரணங்கள் எதுவுமின்றி தேர்தல் துண்டுப் பிரசுரங்களையோ அல்லது சுவரொட்டிகளையோ அச்சிடவோ அல்லது அதற்கு காரணமாகவோ இருக்கக் கூடாது -

() தேர்தல் துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியை வெளியிடுபவர் தம்முடைய கையெழுத்து மற்றும் தம்மை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்துள்ள இரண்டு நபர்களின் மேலொப்பத்தோடு தம்மை அடையாளம் காட்டும் வகையில் ஒரு பிரமாணத்தை இரட்டைப் பிரதிகளில் அச்சிடுபவரிடம் வழங்குதல்.

() அந்த ஆவணம் அச்சிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரமாணத்தின் ஒரு நகலையும் அச்சிடப்பட்ட ஆவணத்தின் ஒரு நகலையும் அந்தந்த நேர்விற்கேற்ப செயல் அலுவலரிடமோ அல்லது ஆணையரிடமோ அல்லது செயலரிடமோ அனுப்பி வைத்தல்.
 இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக -

() ஓர் ஆவணத்தை கையினால் படி எடுப்பது அல்லாத பிற படிப்பெருக்கத்திற்கான எந்த முறையும் 'அச்சிடுதல்' என பொருள் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, 'அச்சிடுபவர்' எனும் சொல்லும் அதன்படியே பொருள் கொள்ளப்பட வேண்டும், மற்றும்

() "தேர்தல் துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டி" என்பது, ஒரு வேட்பாளர் அல்லது பல வேட்பாளர்களின் தேர்தலை ஊக்குவிக்கின்ற அல்லது ஊக்குவிக்காத நோக்கத்திற்காக விநியோகிக்கப்படும் அச்சிட்ட துண்டுப் பிரசுரம் என்று பொருள்படும். ஆனால், தேர்தல் குறித்த நாள், நேரம், இடம் மற்றும் தேர்தல் கூட்டங்கள் குறித்த விவரங்கள் அல்லது தேர்தல் முகவர்கள் அல்லது பணியாளர்களுக்கு தரப்படும் சாதாரண அறிவுறுத்தல்கள் அடங்கிய கைப்பிரதிகள், விளம்பர அட்டைகள் மற்றும் சுவரொட்டிகள் இதில் அடங்காது.
 மேற்கண்ட (1) அல்லது (2) ஆம் உட்பிரிவின்படியான வகைமுறைகள் எவற்றையும் மீறுகின்ற நபர் எவரும், ஆறு திங்கள் வரை நீடிக்கக்கூடிய கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படத் தக்கவராவார்.





No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...