Saturday, March 23, 2019

தேர்தல் முகவர்கள் எத்தனை வகை, அவர்கள் பணிகள் என்னென்ன?




தேர்தல்  முகவர்கள் எத்தனை வகை, அவர்கள் பணிகள் என்னென்ன?

தேர்தல் களத்தில் மூன்று முகவர்கள் செயலாற்றுவர். அவர்கள் தேர்தல் முகவர், வாக்குச் சாவடி முகவர் மற்றும் வாக்குஎண்ணிக்கைச் சாவடி முகவர் என மூவர் ஆவர். அவர்களைப் பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் விதிகள் சொல்வதைத் தெரிந்து கொள்வோம்.

அத்தியாயம்-II

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள்
(Candidates and their Agent)

பிரிவு 40. தேர்தல் முகவர்கள் (Election agents)

தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் முகவராக அவர் அல்லாது வேறு ஏதேனும் நபரை வகுத்துரைக்கப்பட்ட பாங்கினில் அவரது தேர்தல் முகவராக நியமனம் செய்து கொள்ளலாம் மற்றும் அத்தகைய நியமனம் செய்திடும் போது, நியமனம் பற்றிய அறிவிப்பினை வகுத்தமைக்கப்பட்ட பாங்கினில் தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு கொடுத்தல் வேண்டும்


பிரிவு 41. தேர்தல் முகவராக இருப்பதற்கு தகவின்மை (Disqualification for being an election agent)

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் மக்களவை உறுப்பினராக அல்லது மாநிலங்களவை உறுப்பினராக இருந்திட அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்ற ஈரவைகளில் உறுப்பினராக இருந்திட அல்லது வாக்களிக்க அப்போதைக்கு தகுதியற்றவராக்கப்பட்டுள்ள ஒந்தவொரு நபரும் அந்த தகவின்மை அவ்வாறு இருந்து வருகின்ற ஏதேனும் தேர்வில் முகவராக இருப்பதற்கும் தகுதியற்றவராவார்.

பிரிவு 42. தேர்தல் முகவர் ஒருவரின் நியமனம் பின்னறவு அல்லது மரணம்(Revocation of the appointment, or death, of an election agent)

1.   தேர்தல் முகவர் ஒருவரின் பின்னறவு செய்யப்படுவது வேட்பாளரால் கையாப்பமிடப்படுதல் வேண்டும் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் தாக்கல் செய்யப்படும் தேதியிலிருந்து அது நடைமுறைக்கு வரும்.

2.   வேட்பாளர் ஒருவரின் அத்தகைய பின்னறவு அல்லது இறப்பு நிகழ்வில், அந்த நிகழ்வு தேர்தலுக்கு முன்னர் அல்லது தேர்தலின் போது அல்லது தேர்தலுக்கு பின்னர் ஆனால் பிரிவு 78ன் வகையங்களுக்கு இணங்க வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்குகள் தாக்கல் செய்வதற்கு முன்னர் நடந்தாலும், வேட்பாளர் வேறு ஏதேனும் நபரை வகுத்துரைக்கப்பட்ட பாங்கினில் அவரது தேர்தல் முகவராக நியமனம் செய்து கொள்ளலாம் மற்றும் அத்தகைய நியமனம் செய்திடும் போது, நியமனம் பற்றிய அறிவிப்பினை வகுத்தமைக்கப்பட்ட பாங்கினில் தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு கொடுத்தல் வேண்டும்.


பிரிவு 45. தேர்தல் முகவரின் செய்கடமைகள் (Functions of election agents.)

தேர்தல் முகவர் ஒருவர் தேர்தல் தொடர்பாக அதிகாரம் அளிக்கப் பெற்றவாறு அல்லது இச்சட்டத்தின் கீழ் தேர்தல் முகவர் ஒருவரால் நிறைவேற்றுவற்குரிய அத்தகைய செய்கடமைகளை நிறைவேற்றுவார்.

பிரிவு 46. வாக்குச் சாவடி முகவர்களை நியமனம் செய்தல் (Appointment of polling agents)
போட்டியிரும் ஒவ்வொரு வேட்பாளரும் அல்லது அவரின் தேர்தல் முகவரும் ஒரு வாக்குச் சாவடி முகவரை மற்றும் ஒன்று அல்லது இரண்டு இடைமாற்று வாக்குச் சாவடி முகவர்களை குறிப்பிடுவதற்கேற்ப பிரிவு 25ன் கீழ் வகை செய்துள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் அல்லது 29 உட்பிரிவு (4) ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அத்தகைய வேட்பாளரின் வாக்குச் சாவடி முகவரி பணியாற்றுவதற்கேற்ப நியமனம் செய்யலாம்.

பிரிவு 47. வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமனம் செய்தல் (Appointment of counting agents)
போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் அல்லது அவரின் தேர்தல் முகவரும் வகுத்தமைக்கப்பட்ட பாங்கினில், ஆனால் வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய எண்ணிக்கைக்கு மேற்படாது, வாக்கு எண்ணிக்கை இடங்களில் இருந்திட வாக்கு எண்ணிக்கை முகவர் அல்லது முகவர்களை நியமனம் செய்யலாம். அத்தகைய நியமனம் செய்திடும் போது, நியமனம் பற்றிய அறிவிப்பினை
வகுத்துரைக்கப்பட்ட பாங்கினில் தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு அளித்தல் வேண்டும்.

பிரிவு 48. வாக்குச் சாவடி முகவர் அல்லது வாக்கு எண்ணிக்கை ஒருவரின் நியமனம் பின்னறவு அல்லது மரணம் (Revocation of the appointment, or death, of a polling agent or counting agent)

1)   வாக்குச் சாவடி முகவர் ஒருவரின் பின்னறவு செய்திடும் போது வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரால் கையாப்பமிடப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் தாக்கல் செய்யப்படும் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் வாக்குச் சாவடி முகவரின் அத்தகைய பின்னறவு அல்லது இறப்பு நிகழ்வு வாக்குப் பதிவு முடிவடைவதற்கு முன்னர் எந்நேரத்திலும் வேறு வாக்குச் சாவடி அலுவலரை வகுத்துரைக்கப்பட்ட முறையில் நியமனம் செய்யலாம் மற்றும் அத்தகைய நியமனம் பற்றிய அறிவிப்பினை வகுத்துரைக்கப்பட்ட பாங்கினில், வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய அதிகாரிக்கு உடனடியாக கொடுத்தல் வேண்டும்.

2)   வாக்கு எண்ணிக்கை முகவர் பின்னறவு செய்திடும் போது வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவரால் கையாப்பமிடப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் தாக்கல் செய்யப்படும் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவரின் அத்தகைய பின்னறவு அல்லது இறப்பு நிகழ்வு வாக்கு எண்ணிக்கை முகவரின் அத்தகைய பின்னறவு அல்லது இறப்பு நிகழ்வு வாக்குப் பதிவு முடிவடைவதற்கு முன்னர் எந்நேரத்திலும் வேறு வாக்குச் சாவடி அலுவலரை வகுத்துரைக்கப்பட்ட முறையில் நியமனம் செய்யலாம் மற்றும் அத்தகைய நியமனம் பற்றிய அறிவிப்பினை வகுத்துரைக்கப்பட்ட பாங்கினில், வகுத்துரைக்கப்பட்ட அத்தகைய அதிகாரிக்கு உடனடியாக கொடுத்தல் வேண்டும்.


தேர்தல் முகவர்
(Election agents)

இறுதிப் பட்டி யலில் இடம் பெற்ற வேட்பாளராகிய நீங்கள் உங்களுக்கென ஒரு தேர்தல் முகவரை உரிய படிவத்தில் தேர்தல் நடத்து ம் அலுவலருக்கு விண்ணப்பித்து நியமித்துக் கொள்ளலாம், ஆனால். இது கட்டாயமான ஒன்றல்ல , நீங்கள் விரும்பினால் உங்களது தேர்தல் பணிகளுக்காக விதிகளில் நிர்ண யிக்கப்பட்ட எந்த ஒரு பணியையும் அவர் உங்களுக்காக ஆற்றலாம், இதற்கென உரிய படிவத்தை இரண்டு நகல்களில்பூர்த்தி செய்து ஒப்பமிட்டு அதில் உங்கள் முகவரின் புகைப் படத்தினை ஒட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தால். உங்கள் படிவம்ஏற்றுக் கொள்ளப்படின் தேர்தல் நடத்தும் அலுவலர் இரண்டு நகல்களில் ஒன்றை ஒப்பமிட்டு உங்களுக்கு த் திரும்ப அனுப்புவார், தேர்தல் நடத்து ம் அலுவலர் ஒப்பமிட்ட இந்த நகலைத் தேர்தல் முகவர் எப்பொழுதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டு ம்,

வாக்குச் சாவடியினுள் அனுமதிக்கப்படுவோர் அனுமதிக்க ப்படுவோர்

வாக்குச் சாவடியினுள் கீழ்க்கண்ட வர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,
1, வாக்கெடுப்புப் பணியாளர்கள்,
2, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர். வாக்குச் சாவடி முகவர்,
3, வாக் ளிக்க  விரும்பும் வாக்காளர்க ள்,
4, வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தை
5, மாற்று த்திறனாளி. கண்பார்வை இழந்த வாக்காளர்களை வழி நடத்து ம்ஒரு நபர்,
6, வாக்காளர்களை அடையாளம் காட்டு ம்பொதுப்பணியாளர் அல்லது ஒழுங்கை நிலைநாட்ட வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அழைத்தால் வரும் காவலர் அல்லது பணியிலுள்ள வேறு ஒரு அலுவலர்,
7, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அல்லது  மாவட்ட தேர்தல் அதிகாரியால்  அனுமதி அளிக்க பட்ட எந்த ஒரு நபர்,

வாக்குச்சாவடி முகவர்கள்
(Polling Booth agents)

1, உங்கள் வாக்கெடுப்புப் பகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கெடுக்கும் நேரத்தில் உங்களால் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாது என்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உங்கள் சார்பாக ஒரு வாக்குச்சாவடி முகவரை நீங்கள் நியமித்துக் கொள்ளலாம் என்பது ஏற்க னவே தெரிவிக்க ப்பட்டுள்ளது, சட்டத்தையும். விதிகளையும் அனுசரித்து தகுதியுள்ள  நபர் ஒருவரை நீங்கள் முறைப்படி உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்து அலுவலருக்கு அனுப்பி அவரது  அனுமதி  பெற்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு  வாக்குச்சாவடி முகவரையும் தேவையானால்அவருக்கு  மாற்றாக  ஒன்று அல்லது இரண்டு விடுவிப்பு முகவர்களையும் நீங்கள் நியமித்துக் கொள்ளலாம், எனினும் ஒரு நேரத்தில் ஒரு முகவர் மட்டுமே உங்கள் சார்பாக ஒரு வாக்குச் சாவடியில் இருக்கலாம், மேற்படி வாக்குச்சாவடி முகவர் உரிய படிவத்தில் நீங்கள் ஒப்பமிட்ட அல்லது உங்க ளுடைய தேர்தல் முகவர் ஒப்பமிட்ட நியமன பத்திரத்தை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும், அவர் முன்பாக வாக்குச்சாவடி முகவர் ஒப்பமிட வேண்டும், மேற்படி ஒப்பமும்அவர் உங்கள் முன்பிட்ட ஒப்பமும் ஒத்திருக்க வேண்டும், இரண்டு ஒப்பங்களும் ஒத்திருந்தால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்அவரை வாக்குச்சாவடி முகவராக பணியாற்ற அனுமதிப்பார்.

2, வாக்குச்சாவடி முகவர். வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு சென்று விட வேண்டு ம், இதனால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குப்பெட்டியை-வாக்குப்பதிவு கருவிகளை வாக்கெடுப்புக்காகத் தயார் செய்வதை நேரடியாகக் கண்காணிப்பதுடன் வாக்குப் பெட்டி -கட்டுப்பாட்டுக் கருவியின் உட்பும் வைக்கப்படும் முத்திரைத் தாளில் முகவர் ஒப்பம் இடவும் இயலும், அவ்வாக்குச்சாவடிக்கென ஒதுக்க ப்பட்டு ள்ள வாக்குச்சீட்டு களின்முதல்எண்ணையும்கடைசி எண்ணையும் வாக்கெடுப்பு முகவர்கள் வாக்குச்சாவடி  தலைமை அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம், வாக்கெடுப்பு முகவர்கள் உணவிற்காகவோ ஏனைய காரணங்களுக்காகவோ வெளியே செல்ல நேரிடின் அவர்களுக்கு அனுமதிச் சீட்டு ஒன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வழங்கப்படும், மேற்படி அனுமதிச்சீட்டை உபயோகப்படுத்தித்தான் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்லவோ உள்ளே நுழையவோ இயலும் என்பதால் அனுமதிச் சீட்டை பத்திரமாக வைத்திருந்து காவலர் கோரும்சமயமோ அல்லது வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்கெடுப்பு அலுவலர்கள் கோரும் சமயமோ காண்பிக்க வேண்டும், ஒரு வாக்குச்சாவடி முகவர் வெளியே சென்றால் அவருக்குப் பதிலாக மாற்று முகவர் பணியாற்ற அனுமதிக்கப்படுவார், எந்த ஒரு நேரத்திலும். உங்களுக்காக ஒரே ஒரு முகவர் மட்டு ம் வாக்குச்சாவடிக்குள் இருக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும், வாக்குச்சாவடியின் அமைதியான வாக்கெடுப்பு பணிகளுக்கோ அல்லது முறையான செயல்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் எந்த முகவரும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வெளியேற்றப்படலாம் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், வாக்குச்சாவடி முகவர் வாக்கெடுப்பு ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகை தராவிட்டால் அந்த வாக்குச்சாவடியில் அவர் வருகை தராதபொழுது நடந்த எந்த ஒரு சட்டரீதியான செயலும் திரும்ப அவருக்காக நடத்தப்பட மாட்டாது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்,

வாக்குச்சாவடி முகவரின் கடமைகள்
1, பொதுவாக உங்கள் தேர்தல் பணியில் உங்கள் சார்பாக செயல்படவும். உங்ளுக்கு  உதவிபுரியவும் வாக்குச்சாவடி முகவர் உங்களால்நியமிக்கப்படுகிறார், 

, ஆள்மாறாட்ட ம் இருப்பின் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆள்மாறாட்ட ம் செய்வதைத் தவிர்க்க உதவலாம்,
, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டு கள்-வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் தாள்முத்திரை ஆகியவற்றின் வரிசை எண்களைக் குறித்துக் கொள்ளலாம்,

, வாக்கெடுப்பு முடிந்த பின்பு. அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள்- வாக்குப்பதிவு கருவிகள் மற்று ம் தாள் முத்திரைகள் வரிசை எண்களைக் குறித்துக் கொள்ளலாம்,

, வாக்குப் பெட்டிகள்-வாக்கு ப்பதிவு கருவிகள் வாக்கெடுப்புக்காகத் தயார் செய்யப்படுமுன் அவற்றுள் விதிமுறைகளின் கீழ் இருக்க  வேண்டி அடையாள அட்டைத்துண்டுத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்,

, வாக்குப் பெட்டிகள்-வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பும் வாக்கெடுப்பு முடிந்த பின்பும் முறையாக முத்திரை இடப்படுவதை உறுதி செய்து கொள்வதுடன் விரும்பினால் தன் முத்திரையையும் அதில் பதிக்கலாம்,
ஆனால் வாக்கெடுப்பு முகவர் அவ்வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுகளின்-வாக்கு பதிவு கருவிகளின் எண்களைக் குறித்து கொள்ளலாம், ஒவ்வொரு வாக்காளரும் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை நேரடியாகத்  தெரிந்து கொள்வதோ. மறைமுகமாக அறிய முயற்சிப்பதோ கூடாது,

2, வாக்குச்சாவடி முகவர் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது  தேர்தல் சின்னம் அடங்கிய எதையும் வைத்து கொண்டு வாக்குச் சாவடியினுள் பணியாற்றக் கூடாது,
3, வாக்காளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ (சைகை மூலமாகவோ அல்லது சங்கேதக் குறிகள் மூலமாகவோ) எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்கத் தூண்டக்கூ டாது,

வாக்குச்சாவடி முகவர்கொண்டு வரவேண்டி யவை

வாக்குச்சாவடி முகவர் வாக்குச்சாவடி பணிக்கு வரும்பொழுது அவரது நியமன ஆணையுட ன் கீழ்க்கண்டவற்றையும்கொண்டு வரலாம்,

, அவ்வாக்குச்சாவடி சம்பந்தப்பட்ட வாக்காளர் பட்டியல்,

, அவ் வாக்கெடுப்பு பகுதியில்இறந்து விட்ட . அப்பகுதியை விட்டு வெளியேறிய வாக்காளர்கள் விவரம்,

, அவரது உலோக முத்திரை (மோதிரம்தவிர) பேனா. பென்சில். தாள் போன்றவை,


வாக்கு எண்ணிக்கை முகவர்

1. வாக்கு எண்ணுகை எந்த நாளில் எந்த நேரம் தொடங்கி. எந்த இடத்தில் எண்ணப்படும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும், வாக்கு எண்ணும் இடத்தில் நீங்களும். உங்கள் தேர்தல் முகவரும் இருக்கலாம், ஒரு மேசைக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் நீங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கான முகவர்களை நியமிக்கலாம், இதற்கென உள்ள படிவத்தைப்பூர்த்தி செய்து தேர்தல் நடத்து ம்அலுவரின் முன்ஒப்புதல் பெற வேண்டும், மேலும், அப்படிவத்தில் முகவருடைய நிழற்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்,



2, நீங்க  உங்கள் வாக்கு எண்ணுமிடத்து முகவரோ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்குகள் எண்ணும் இடத்தில் கூடுவது நலம், வாக்குப் பெட்டிகள்-வாக்குப் பதிவு இயந்திரங்கள் எத்தகைய சேதாரமோ மாற்றங்களோ (tampering) இன்றி உள்ளனவா என்பதையும். தாள் முத்திரை சரியாக உள்ளனவா என்றும் மேலும் வாக்குப் பெட்டிகள்- வாக்குப்பதிவு  இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட பின் திறக்கப்பட்டதற்கான தடயங்கள் ஏதுமின்றி உள்ளனவா என்பதையும் நீங்களும் உங்களுடைய முகவர்களும் பார்க்கலாம், வாக்குப் பெட்டிகள்-வாக்குப் பதிவு கருவிகள் திறக்கப்பட்டு வாக்குகள் உரியமுறையில் எண்ணப்படுகின்றனவா என்பதையும் பார்க்கலாம்,

3, வாக்கு எண்ணுமிடத்தில் அமைதியாகவும ஒழுங்காகவும் நடந்து கொள்ள வேண்டும், வாக்கு எண்ணுகைக்கு ஊறு விளைவிப்ப து குற்றமாகும்,

4, உங்கள் முகவர்களுக்கான சிற்றுண்டியையும் உணவையும் ஏற்பாடு செய்வது உங்கள் பொறுப்பாகும்,

5, நீங்கள் விரும்பினால் வாக்குகளின் கணக்கையும். எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விபரத்தையும் குறித்துக் கொள்ளலாம். இதற்கான விவரங்களடங்கிய படிவங்களின் படி குறிப்பெடுத்துக் கொள்ளலாம்,

6, நீங்களே அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற வேட்பாளரானால். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அடங்கிய தேர்தல் விவரப்பட்டியலையும் நீங்களே
வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற அதிகார பூர்வமான அறிவிப்பினையும் உரிய படிவத்தில் உங்களுக்குத் தருவார்,

No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...