Wednesday, March 20, 2019

வேட்புமனுக்களைத் திரும்பப்பெறுதல் (Withdrawal of candidature)






வேட்புமனுக்களைத் திரும்பப்பெறுதல் (Withdrawal of candidature)
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 37. வேட்பு மனுவினைத் திரும்பப் பெறல்

1)   எந்தவொரு வேட்பாளரும் தனது வேட்பு மனுவை எழுத்துருவிலான அறிவிப்பில் வகுத்தமைக்கப்பட்ட அத்தகைய விவரங்களுடன் மற்றும் அவரால் மேற்குறிப்பிடப்பட்டு மற்றும் பிரிவு 30இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நாளில் மதியம் 3 மணிக்குள் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் வேட்பாளரால் நேரிலோ அல்லது அவரது அவரது முகவராலோ அல்லது இதன் பொருட்டு வேட்பாளரால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள முகவராலோ அளிக்கப் பெறலாம்.

2)   உட்பிரிவு (1)இன் படி தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பினை அளித்துள்ள வேட்பாளர் எவரும் அவ்வறிவிப்பினை நீக்குவதற்கு அனுமதிக்கமாட்டார்.

3)   தேர்தல் பொறுப்பு அலுவலர், திரும்பப்பெறும் அறிவிப்பின் உண்மை நிலை மற்றும் அதனை அளித்தவரின் அடையாளம் ஆகியவை குறீத்து மனநிறைவு அடைவதன் பேரில், தத்தம் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்ற வேட்பாளர்களின் பட்டியலைக் காட்டும் அறிவிப்பு ஒன்றினை தனது அலுவலகத்தில் நன்கு தெரியும்படியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும்.

உங்களுடைய வேட்புமனு பரிசீலனையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது போல உங்கள் பெயர் வேட்பாளர் பட்டி யலில் இடம் பெற்றிருக்கும், இந்நிலையில்நீங்கள் வேட்புமனுவைத் திரும்பப்பெற விரும்பினால் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து ஒப்பமிட்டு நீங்களோ அல்லது உங்களால் அதிகாரமளிக்கப்பட்ட உங்கள் வேட்புமனுவை முன்மொழிந்த நபரோ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திரும்பப்பெற நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பிற்பகல் 3 மணிக்குள் நேரடியாக தாக்கல்செய்ய வேண்டும், அவ்வாறு நீங்கள் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றால் இதற்கென ஒரு ஒப்புதலைத் தேர்தல் நடத்தும்அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்,

வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், வேட்புமனு திரும்பப்பெற நிர்ணயிக்கப்பட்ட  நாள்-நேரத்திற்குள் திரும்பப்பெற வேண்டும், தவறும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பதவியிடத்திற்கு போட்டியிடுவதாக நிர்ணயிப்பார், பிறிதொரு தேர்தலுக்கான தங்களது வேட்புமனு திரும்பப் பெற்ற தாகக்கருதப்படும்,

எந்த நிலையிலும் வேட்பு மனுவைத் திரும்பப்பெற்ற பின் நீங்கள் திரும்பப் பெற்ற அறிவிப்பை ரத்து செய்ய இயலாது, தேர்தலில் போட்டியிடவும் இயலாது,  எனவே. இது குறித்து  நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், வேட்புமனுவைத் திரும்பப் பெற நீங்கள் தாக்கல் செய்த அறிவிப்பினைப் பெற்றுக் கொண்டமைக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் அளிக்கும் ஒப்புதலுடன் தான் நீங்கள் உங்களது காப்புத் தொகையைத் திரும்பப்பெற இயலும் என்பதால் இவ்வொப்புதலைப் பெறத் தவறக்கூடாது, வேட்புமனு திரும்பப்பெற நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளன்று மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்து ம் அலுவலர் யார்யாரெல்லாம் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற அறிவிப்புகொடுத்துள்ளார்கள் என்று ஒரு அறிவிப்பையும் தன் அலுவலக விளம்பரப் பலகையில் வெளியிட்டு விளம்பரப்படுத்துவார், இவ்வறிவிப்பிற்குப் பிறகு வெளியிடப்படும் இறுதிப்போட்டிக்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் நபர்களுக்கு மட்டுமே சின்னங்கள். உரிய விதிகளை அனுசரித்து  வழங்கப்பட்டு பட்டியலில் பிரசுரிக்கப்படும்,


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...