Tuesday, March 19, 2019

வேட்புமனு தாக்கல் செய்த பின் வேட்பாளர் செய்ய வேண்டியது என்ன? [வேட்புமனு பரிசீலனை, நிராகரிப்பு]




வேட்புமனு தாக்கல் செய்த பின் வேட்பாளர் செய்ய வேண்டியது என்ன?
[வேட்புமனு பரிசீலனை, நிராகரிப்பு]


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 சொல்வதென்ன..?

பிரிவு 35. வேட்புமனுக்கள், அவற்றை கூர்ந்தாய்வு செய்வதற்கான நாள் மற்றும் இடம் பற்றிய அறிவிப்பு (Notice of nominations and the time and place for their Scrutiny.—)

தேர்தல் பொறுப்பு அலுவலர், உட்பிரிவு (1)இன் கீழ் வேட்பு மனு பெற்றவுடன் வேட்பு மனுக்களை கூர்ந்தாய்வு செய்வதற்கென அறுதியிட்ட நாள் மற்றும் இடம் ஆகியன குறித்து நபர் அல்லது நபர்களுக்கு அறிவிப்பதுடன் வேட்பு மனுவின் மீது அதன் தொடர் எண்ணிக்கைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் அவரிடம் வேட்புமனு எந்நாளில் எந்த நேரத்தில் அளிக்கப் பெற்றது என்பவற்றை குறிப்பிட்டு சான்றிதழில் ஒப்பமிடவும் வேண்டும் மற்றும் அதன் பின்னர் அவரது அலுவலகத்தில் பார்வையில்படும் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் பற்றிய விபரங்களை அடங்கிய அறிவிப்பினை ஒட்டுமாறு செய்தல் வேண்டும்.

பிரிவு 36. வேட்பு மனுவை ஆய்வுசெய்தல் (Scrutiny of nominations)

1)   பிரிவு 30.இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அறிவிக்கப்பெற்ற நாளில், நேரத்தில், தேர்தல் பொறுப்பு அலுவலர் ஆய்வு செய்வதற்காக அறுதியிடப்பெற்ற அத்தகைய இடத்தில் வேட்பு மனுக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வேட்பாளர், அவரை முன்மொழிந்தவர், அவரால் உரியவாறு அதிகாரம் அளிக்கப் பெற்ற மற்றொருவர் அந்த ஆய்வில் பங்கு பெறலாம். ஆனால் பிற எவரும் பங்கு பெறலாகாது. தேர்தல் பொறுப்பு அலுவலர் பிரிவு 33இல் விதிக்கப்பட்ட முறையில் மற்றும் காலத்திற்குள் அளிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை ஆராய்வதற்காக அவர்கள் அனைவருக்கும் நியாயமான அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

2)   தேர்தல் பொறுப்பு அலுவலர், வேட்பு மனுக்களை ஒவ்வொன்றாகவும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் மற்றும் எந்தவொரு வேட்பு மனு குறித்தும் எழுப்பப்படுகின்ற மறுப்புகள் அனைத்தையும் அத்தகைய மறுப்பின் பேரிலோஅல்லது தனது சொந்த செயற்பாட்டினாலோ அவர் கருதுகின்ற வகையில் அத்தகைய சுருக்க விசாரணைக்குப் பிறகு, பின்வரும் ஏதேனுமொரு காரணங்களால் எந்தவொரு வேட்பு மனுவையும் அவர் தள்ளுபடி செய்யலாம்.

a.   வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நாளில் இச்சட்டத்தின் ஏதேனுமொரு வகையங்களின் கீழ் அவ்வேட்பாளர் தகுதியுடையவராக இல்லை அல்லது காலியிடத்தை நிறைவு செய்ய வேண்டி தேர்ந்தெடுப்பதற்குத் தகுதியற்றவர் என்ற நிலையில்,
பிரிவு 84,102,173 மற்றும் 191 இச்சட்டத்தின் பாகம் II மறும் அரசு ஒன்றியப் பிரதேசங்கள் சட்டப் பிரிவுகள் 4 அல்லது 6 அல்லது
b.   பிரிவு 33 அல்லது 34 இல் உள்ள வகையங்களில் ஏதேனுமொன்றுக்கு இணங்கத் தவறிய நிலையில், அல்லது

c.   வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரின் அல்லது முன்மொழிந்தவரின் ஒப்பம் உண்மையானதாக இல்லை என்ற நிலையில்

3)   உட்பிரிவு (2) கூறு (b) அல்லது (C) இல் அடங்கியுள்ளது எதுவும் எவரேனும் ஒரு வேட்பாளர் வேட்பு மனுவை உரியவாறு தாக்கல் செய்திருந்து, அவ்வேட்பு மனு தொடர்பில் குறைபாடு ஏதேனும் கண்டறியப் பெறவில்லையெனில் ஒரு வேட்பாளரின் வேட்புமனு தொடர்பில் குறை ஏதேனுமிருப்பின் அதனைத் தள்ளுபடி செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டதாக கருதப்படலாகாது.

4)   குறை என்று கொள்ளும் அளவிற்கு போதிய கூறுகள் இல்லாதிருந்தால், அக்காரணத்தின் பேரில் எந்தவொரு வேட்பு மனுவையும் தேர்தல் பொறுப்பு அலுவலர் தள்ளுபடி செய்யக் கூடாது.

5)   தேர்தல் அலுவலர் பிரிவு 30 கூறு (b) யில் இதன் பொருட்டுக் குறிப்பிடபெற்ற நாளில், நேரத்தில் வேட்பு மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும். கலவரம் அல்லது மட்டுமீறிய வன்முறைச் செயல் அல்லது அவரால் கட்டுப்படுத்த முடியாத காரணங்களால் அத்தகைய நடவடிக்கைகளில் குறுக்கீடு அல்லது முட்டுக்கட்டை ஏற்பட்டால் தவிர செயற்பாடுகள் எதையும் தள்ளி வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.

வரம்புரையாக, தேர்தல் பொறுப்பு அலுவலரால் அல்லது பிற ஏதேனும் ஒருவரால் எதிர்ப்பொன்று தெரிவிக்கப்படுமேயாயின், தொடர்புடைய வேட்பாளர் கூர்ந்தாய்வு செய்வதற்கென அறுதியிடப்பெற்றதற்கடுத்த நாளில் முற்பகல் 11.00 மணிக்குள் வேட்பாளர் எதிர்த்துரைக்க அனுமதிக்கப் பெறலாம். தேர்தல் பொறுப்பு அலுவலர், தள்ளி வைக்கப் பெற்ற நாளில் தனது முடிவினை அவ்வேட்பு மனுவில் பதிவு செய்ய வேண்டும்.

6)   அதனை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தமை குறித்து தனது முடிவை ஒவ்வொரு வேட்பு மனுத் தாளிலும், தேர்தல் பொறுப்பு அலுவலர் குறிப்பிட வேண்டும். வேட்பு மனுத்தாள் நிராகரிக்கப்படுமேயாயின், அவ்வாறு நிராகரித்தமைக்கான தனது காரணங்களுக்கான சுருக்கமான அறிக்கையினை எழுத்து மூலமாகத் தேர்தல் பொறுப்பு அலுவலர் பதிவு செய்ய வேண்டும்.

7)   இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, தொகுதி ஒன்றில் தற்போது செயலில் உள்ள வாக்காளர் பட்டியலின் சான்றிட்ட பதிவு நகல், பதிவில் கட்டுகை நபர் அந்த தொகுதியின் வாக்காளர் என்பதற்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1950 பிரிவில் குறிப்பிடப் பெற்ற தகவின்மைக்குட்பட்டவர் என மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, அறுதியான சாட்சியமாகும்.

8)   வேட்பு மனுத்தாள்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததும், ஏற்றுக் கொண்டதற்கான அல்லது நிராகரித்தமைக்கான முடிவுகளை உடனடியாகப் பதிவு செய்தபின்னர், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் (செல்லுபடியான) வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றினை படிவம் 6இல் தேர்தல் பொறுப்பு அலுவலர் தயாரித்து அதன் படியொன்றினை அவரது அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்தல் வேண்டும்.

வேட்புமனு பரிசீலனை

 வேட்புமனு பரிசீலனைக்கு  எடுத்துக் கொள்ளப்படும் நாளன்று . குறித்த நேரத்தில். குறித்த இடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் உங்களது வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், அவர் இப்பணியை ஒரு நீதிபதியின் நிலையிலிருந்து செய்வார், அச்சமயம் அவர்கோரும் ஒத்துழைப்பை  நீங்கள் நல்கீ உதவ வேண்டும், பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலரால்-உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரால் மட்டுமே செய்யப்படும், மேற்படி பரிசீலனையின் போது நீங்களோ. உங்களை முன்மொழிந்தவரோ மற்றும் நீங்கள் அங்கீகரித்த ஒரு நபரோ. தேர்தல் நடத்தும் அலுவலரின் பரிசீலனை நடவடிக்கைகளைக் கவனிக்கலாம், இம்மூவரைத் தவிர வேறொருவரும்  இருக்கக்கூ டாது, தேர்தல் நடத்து ம் அலுவலர் ஒவ்வொரு வேட்புமனுவாக பரிசீலனை செய்யும்பொழுது. அந்த வேட்புமனு குறித்து நீங்களும் ஏதாவது மறுப்புத் தெரிவிக்க வேண்டியிருந்தால். அதனை எழுத்து மூலமாக தேர்தல் நடத்தும் அலுவலர் குறிப்பிடும் நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும், உங்கள் வேட்புமனு குறித்து சக வேட்பாளர்கள் அல்லது அவரது சார்பாக முன்மொழிந்த வர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர் ஆட்சேபணைகள் அல்ல து மறுப்புi ரகள் தாக்கல் செய்தால். அந்த ஆட்சேபணைகளை அல்ல து மறுப்புரைகளை தேர்தல் நடத்து ம் அலுவலர் நிர்ண யிக்கும் காலத்திற்குள் நீங்கள் முறியடிக்க வேண்டு ம், ஒரு வேட்புமனு குறித்த மறுப்புரைகள் ஏற்கப்படின். தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த வேட்புமனுவை நிராகரித்து ஆணையிடுவார், அவ்வாறு அவர் உத்தரவிடும் சமயம் எழுத்து மூலமாக அதற்கான காரணங்களை நீங்கள் கோரின் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார், அவரது ஆணையே இறுதியானதாகும், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டால். உங்களால் தேர்தலில் போட்டியிட இயலாது, இதுகுறித்து திருப்தி அடையாவிட்டால் நிர்ணயிக்கப்பட்ட தேர்தல், நீதி மன்றத்தில் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரசுரம்செய்த பின்னரே வழக்கு தொடர இயலும், எனவே. வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் சமயம் விழிப்புட ன் இருந்து உங்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல் கவனித்துக் கொள்வது உங்களது பொறுப்பாகும்,


வேட்புமனு கீழ்க்கண்ட காரணங்களுக்காக நிராகரிக்கப்படலாம்,

() நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளன்று உரிய தகுதியைப் பெறாமல் இருந்தால் அல்லது தகுதியின்மை உடையவராக இருந்தால்;

() நீங்கள் அல்லது உங்கள் பெயரை முன் மொழிபவரைத் தவிர ஏனைய பிறர் உங்களது வேட்புமனுவைத்தேர்தல் நடத்தும்அலுவலரிடம் தாக்கல் செய்தால் 

() தேர்தல் அலுவலர் அல்ல து உதவித்தேர்தல் அலுவலர் தவிர  மற்ற நபர்களிடம் நீங்களோ அல்லது முன்மொழிபவரோ உங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தால் ;

() தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்ட இடம் தவிர பிற இடங்களில் உங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தால்அல்லது வேட்புமனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நாள் அல்லது நேரம்கடந்து வேட்புமனு தாக்கல்செய்தால் ;

() வேட்புமனு குறிப்பிட்ட படிவத்தில்இல்லாது இருந்தால் ;

() வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் ;

() வேட்புமனு முறையாக பூர்த்தி செய்யப்படாது இருந்தால் ;

() வேட்புமனுவில் நீங்களோ அல்ல து உங்கள் பெயரை முன்மொழிபவரோ ஒப்பமிடத் தவறியிருந்தால் ;

()வேட்புமனுவுட ன்இணைத்து அனுப்ப வேண்டி ஒப்புறுதிப் பகுதிகளை (declaration) ஒப்பமிட்டு இணைக்கத் தவறியிருந்தால் ;

() உரிய காப்புத்தொகை செலுத்தாதிருந்தால் ;

() வேட்புமனுவில் கண்டுள்ள வேட்பாளர்  கையொப்ப ம் அல்லது முன்மொழிபவர் கையொப்ப ம் மெய்யானதாக  இல்லாமலிருந்தால் ;

(ஒள) நீங்கள் வேட்புமனு செய்திருக்கும் பதவியிடம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து  அதற்கான தகுதி உங்களுக்கு இல்லாமலிருந்தால் ;

() உங்கள் பெயரை முன்மொழிபவர்.,வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தால்;

வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் சமயம் உங்களது வேட்புமனுக்கள் மீது  எடுக்கப்படும் மறுப்புரைகள் அல்லது ஆட்சேபணைகள் குறித்து உங்கள் நிலைமையை ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

() உங்கள் பெயர் மற்றும் உங்களை முன்மொழிபவர் பெயர்காணப்படும் வாக்காளர் பட்டி யலின் அங்கீகரிக்கப்பட்ட  நகல் அல்லது இதுகுறித்த சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியின் சான்று ,

() உங்கள் வயது குறித்த விவரங்களை நிரூபிப்பதற்குத் தேவையான சான்றுகள் ஆவணங்கள்(Documents)

() காப்புத்தொகை செலுத்தியதற்கான ரசீது மற்றும் அதன் நகல்கள்

() தேர்தல் நடத்தும் அலுவலரால் உங்களுக்கு  வழங்க ப்பட்ட பரிசீலனை நாள்குறித்த அறிவிப்பு மற்று ம் உங்களது வேட்புமனு பெறப்பட்ட மைக்கான ஒப்புதல்,

() ஆதிதிராவிடர்-பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்தவராக இருப்பின் அதற்கானச் சான்று ,


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...