Saturday, March 16, 2019

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான சில விதிமுறைகள்




மக்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் சேர்ந்து 5பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல், மற்றும் காலியாக உள்ள 18 சட்ட பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது.


வேட்பு மனு தாக்கலுக்கான விதிகளில் திருத்தம்: 5 ஆண்டு வருமான வரி கணக்கை பிரமாண பத்திரத்தில் தர வேண்டும்

வேட்பு மனு தாக்கல்
இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய நாள் தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேட்பு மனு தாக்கல்
வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி. அதன்படி, "ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்யக்கூடாது. மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளருடன் 5 பேருக்கு மேல் இருந்தால் அனுமதிக்க கூடாது.

வாகனங்கள்
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போது பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கலாம். ஆனால் எத்தனை பத்திரிகையாளர்களை அனுமதிப்பது என தேர்தல் அதிகாரி முடிவெடுக்கலாம். அலுவலக வாயிலில் இருந்து 100 அடி தொலைவுக்குதான் வாகனங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும்.

நோட்டீஸ் போர்டு
வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் யார், அவர்களின் விவரம் எல்லாம் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக நோட்டீஸ் போர்டில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படும். இதை தவிர அந்த விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்".

No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...