Monday, March 25, 2019

அரசியல் கட்சி, வேட்பாளர்களுக்கான கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்தை விதிமுறைகள்




அரசியல் கட்சி, வேட்பாளர்களுக்கான கூட்டங்கள் ஊர்வலங்கள் நடத்தை விதிமுறைகள்

I. பொதுவான நடத்தை விதிமுறைகள்

 (1) பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ ஒருவருக்கு  ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம்  அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும்  எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது.

(2) பிற கட்சிகள் மீது விமர்சனம் மேற்கொள்ளும்போது, அக்கட்சிகளின் கொள்கைகள், செயல்திட்டங்கள், கடந்த காலச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனமாக இருக்க வேண்டும். பிற கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொதுவாழ்க்கையோடு தொடர்பற்ற சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்தச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

(3) வாக்குகளைப் பெறுவதற்காக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக் கூடாது. தேர்தல் பிரசாரக் களமாக, மசூதி, சர்ச் மற்றும் கோயில் போன்றவழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது.

(4) தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றெல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்திலிருந்து வாக்குப் பதிவு முடிவடைவது வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொதுக் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச்  செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றமுறைகேடானநடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

(5) ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நேர்ந்தாலும், அமைதியான, இடர் இல்லாத குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கான  அவரது உரிமை மதிக்கப்பட வேண்டும். எந்தபோரு சூழ்நிலையிலும், தனிநபரின் கருத்துகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் விதமாக, அவர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களிலும் மறியல்களிலும் ஈடுபடக் கூடாது.

(6) தனி நபருக்குச் சொந்தமான இடங்கள் , கட்டடங்கள் , சுற்றுச்சுவர்கள்  அவர்களின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், தொகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற செயல்களை செய்ய அரசியல் கட்சிகள் அல்லது  வேட்பாளர்கள் தங்களது தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.

(7) அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தங்களது தொண்டர்களால் பிற கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் எவ்வித இடையூறும்  தடங்கலும் ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்களோ ஆர்வலர்களோ பிற கட்சியினரின் பொதுக் கூட்டங்களில் நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ கேள்வி கேட்டோ தங்கள் கட்சியின் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தோ இடையூறு செய்யக்கூடாது.

ஒரு கட்சியினர் ஓரிடத்தில் பொதுக்கூட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக பிற கட்சியினரின் ஊர்வலங்கள் நடத்தப்படக் கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்தொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக்கூடாது.

I I. கூட்டங்கள்
 (1) போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அமைதி ஒழுங்கினை
நிலைநாட்டுவதற்கும் வசதியாக கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்களைக் கட்சியோ, வேட்பாளரோ உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

(2) கூட்டம் நடத்தப்படும் இடம் குறித்து முடிவு செய்யும் முன்னர், குறிப்பிட்ட அந்த இடத்தில் தடை உத்தரவோ கட்டுப்பாட்டு உத்தரவோ நடைமுறையில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தடை ஆணைகள் ஏதேனும் நடைமுறையில் இருப்பின் அதே தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டும். அத்தகைய தடை ஆணைகளின் மீது விலக்கு பெற விரும்பினால், தொடர்புடைய அதிகாரிகளுக்கு கட்சியோ அல்லது வேட்பாளரோ முன்கூட்டியே விண்ணப்பித்து விலக்குப் பெற்றிருக்க வேண்டும்.

(3) கூட்டம் நடத்துவதற்குத் வைதேயான ஒலிபெருக்கி முதலிய கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியோ, உரிமமோ பெற வேண்டியிருப்பின், அதற்காக உரிய அதிகாரிகளிடம், கட்சியோ அல்லது வேட்பாளரோ முன்கூட்டியே விண்ணப்பித்து, உரிமம் அல்லது அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

(4) கூட்டத்தின்போது இடையூறு செய்வோதரயும், சட்ட - ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோதரயும் சமாளிப்பைற்கு, பணியிலிருக்கும் காவல் துறையினரின் உதவியை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள் நாடிப் பெறலாம். அமைப்பாளர்கள் தாங்களாகவே மேற்படி நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

I I I. ஊர்வலம்
(1) ஊர்வலம் தொடங்கும் நேரம் மற்றும் இடம், ஊர்வலம் செல்லும் வழி மற்றும் ஊர்வலம் முடிவடையும் நேரம் மற்றும் இடம் போன்றவிவரங்களை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யும் கட்சியோ அல்லது வேட்பாளரோ முன்கூட்டியே முடிவுசெய்துகொள்ள வேண்டும். மேற்படி நிகழ்ச்சியில் இயல்பான மாற்றம் வேண்டுமானால் செய்யப்படலாம்.

(2) நிகழ்ச்சிக்கு அமைப்பாளர்கள் போதுமான ஏற்பாடுகள் செய்துதர வசதியாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே கடிதம் அளிக்க வேண்டும்.

(3) ஊர்வலம் நடத்துவோர், ஊர்வலம் செல்லவிருக்கும் பகுதிகளில்,
பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும். தகுதி வாய்ந்த உயர் அதிகாரிகளால் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டாலொழிய, அந்த உத்தரவுகள் தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்துப் போக்குவரத்து விதிகளும், கட்டுப்பாடுகளும் கவனமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

(4) ஊர்வலம் செல்வதால், போக்குவரத்துக்கு எவ்விதத் தடையோ இடையூதோ ஏற்படாதவண்ணம், ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊர்வலம் மிக நீண்டதாக இருந்தால், பெரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், குறிப்பாக, சாலைச் சந்திப்புகள் போன்றஇடங்களில், ஊர்வலத்தை வசதியான இடைவெளி விட்டு நடத்தலாம். நிறுத்தப்பட்ட போக்குவரத்து ஒவ்போரு கட்டமாகச் செல்ல வகை செய்வதற்காக இடைவெளி விட்டு ஊர்வலம் நடத்தலாம்.

(5) ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்திற்கு வலதுபுறம் போதுமான இடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், பணியில் இருக்கும் காவலர்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி தவறாது நடந்து கொள்ளவேண்டும்.

(6) ஒரே நேரத்தில், ஒரே பாதையிலோ அல்லது அவை பாதையில் பகுதியளவு வருமாறோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால், ஊர்வலத்தில் எவ்வித மோதல்களும் இடம்பெறா வண்ணமும், போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையிலும் பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் திருப்திகரமாக ஏற்பாடு செய்வதற்காக உள்ளூர் காவல்துறையினரின் உதவியையும் கோரிப் பெறலாம். இதற்காக, அரசியல் கட்சியினர் கூடுமான வரையில் விரைவாக காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம்.

(7) ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள், உணர்ச்சிப் பெருக்கினால், தங்கள் கையில் கொண்டு செல்லும் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்த இயலாத வண்ணம், இயன்றவரை, உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசியல்
கட்சியினரோ, வேட்பாளர்களோ மேற்கொள்ள வேண்டும்.

(8) எந்தவொரு அரசியல் கட்சியோ வேட்பாளரோ, பிற அரசியல் கட்சிகளையோ அல்லது பிற தலைவர்களையோ உருவகப்படுத்தும் உருவப் பொம்மைகளை எடுத்துச் செல்வதோ, பொது இடங்களில் அவ்வுருவ பொம்மைகளை ரிப்பதோ, அவற்தை வைத்து பிற வகையான போராட்டங்கள் நடத்துவதோ கூடாது.


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...