Friday, March 22, 2019

வேட்பாளர் தேர்தல் காலத்தில் செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை




வேட்பாளர்  தேர்தல் காலத்தில் செய்யத்தக்கவை மற்றும் செய்யத்தகாதவை

1, தேர்தல் குறித்த சட்ட ங்கள். விதிமுறைகள். செயல்மு றை அறிவுரைகள். நடைமுறைகள் மற்றும் பிற அறிவுரைகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

2, எந்த பதவியிடத்திற்குப் போட்டியிடுகின்றீர்களோ அந்த தொகுதி முழுமைக்குமான வாக்காளர் பட்டியலைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்,
3, உங்கள் பெயர் மற்றும் விவரங்கள், வாக்காளர் பட்டியலில் தவறேதுமின்றி சரியானபடி  இடம் பெற்றுள்ளதா என்பதைத் தேர்தலில் போட்டியிட  முன்கூ ட்டியே  சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.

4, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிச் சரியாக அறிந்து கொண்டு குறிப்பிட்ட தகுதிகள் உங்களுக்கு முழுமையாக உள்ளனவா என்பதையும். தகுதியின்மைகள் எதுவும் உங்களுக்கு இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு வேட்புமனு தாக்கல்செய்ய வேண்டு ம், தகுதியின்மை ஏதும் இருந்தால் விதிகளின்படி இயன்ற இனங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நாளுக்கு முன்பாக உங்களைத்  தகுதி உள்ளவராக ஆக்கிக் கொண்டு பின்பு வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

5, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உரிய படிவத்தை முன்கூட்டி யே பெற்றுக் கொள்ள வேண்டும், மேற்படி படிவத்தை முறைப்படி பூர்த்தி செய்யவும் வேண்டும், உரிய இடங்களில் ஒப்பமிடவும் வேண்டும், உறுதிமொழிகளையும் அளிக்க வேண்டும், மேலும். தொடர்புடைய சட்ட ங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு குற்ற செயலுக்காகவும். தண்டிக்கப்பட்டிருந்தால் தகுதியின்மையாக்கிட  வகை செய்யப்பட்டுள்ளதால், தாங்கள் இது குறித்து விவரங்கள் அடங்கிய இவ்வாணைய  வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கு முன்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டு ம், (இது தொடர்பான படிவங்களை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள லாம்)

6, வேட்புமனுவை நீங்களே நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நிர்ணயிக்கப்பட்ட நாளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும், இயலாவிடின் மேற்படி காலத்தில் உங்கள் பெயரை முன்மொழிபவர் மூலம்தாக்கல் செய்ய வேண்டும்.

7, உங்கள் பெயரை முன்மொழிபவர். நீங்கள் எந்த வார்டிற்கு வேட்புமனு தாக்கல் செய்கிறீர்களோ அந்த வார்டுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளாரா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்,
8, ஒரு வேட்புமனுவுக்கு மேல்தாக்கல் செய்ய நீங்கள் விரும்பினால் நான்கு வேட்புமனுக்கள் வரை வெவ்வேறு முன்மொழிபவர்கள் மூலம் தாக்கல் செய்யலாம், நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வார்டுகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றாலும். ஏதாவது ஒரு வார்டு உறுப்பினர் பதவியிடத்தினை மட்டுமே சட்டக் கூ றுகளின்படி வகிக்க இயலும்'.

9, பொதுவாக வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தேர்தல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும், எனினும். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவைப் பெற்று கொள்ள உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அங்கீகாரம் அளித்திருந்தால் அவரிடத்திலும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம்,

1,0 வேட்புமனுவுடன் நிர்ணயிக்கப்பட்ட காப்புத் தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டினை இணைக்க வேண்டும்,

11, வேட்புமனு தாக்கல் செய்ததற்கான ஒப்புதல் மற்று ம் வேட்புமனு பரிசீலனைக்கான அறிவிப்பினைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளவேண்டும்,

12, வேட்புமனு பரிசீலனை நாளன்று கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட  இடத்தில். நிர்ண யிக்கப்பட்ட நேரத்தில் பரிசீலனையில் கலந்து கொள்ள வேண்டும், பரிசீலனை முடிந்த பின் உங்கள் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதையும். ஏற்றுக்கொள்ளப்பட்ட  வேட்பாளர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்,

13, சின்னம் ஒதுக்கப்படுவது சம்பந்தமாக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளராக இருப்பின். தேர்தல் நடத்து ம் அலுவலருக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை  குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா என உறுதி செய்து கொள்ள வேண்டும், ஏனெனில் அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் நீங்கள் சுயேட்சை வேட்பாளராகக் கருதப்பட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும்,

14, வாக்கெடுப்பு நாள் குறித்த அறிவிப்பையும் வாக்கெடுப்பு நேரம் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்,

15, தேர்தல் முகவரை நியமித்துக் கொள்ள முறைப்படி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்,

16, வாக்குச் சாவடியின் விவரங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்,

17, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடி முகவர் ஒருவரை (தேவையானால் ஒன்று அல்ல து இரண்டு விடுவிப்பு முகவர்களை) நீங்கள் நியமிக்கலாம், இது உரிய படிவத்தில்இருக்க வேண்டும்,

18, வாக்குச் சாவடி முகவர்களுக்கு வசதியாக அவரவர் பணியாற்றும் வாக்குச் சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியலின் நகல் ஒன்றை அளிக்க வேண்டும்,

19, வாக்காளர்களுக்கு அடையாளச் சீட்டு அளிக்க விரும்பினால் உங்கள் பெயரையும். சின்ன த்தையும் குறிப்பிடாமல். வெள்ளைத்தாளில் வாக்காளர் குறித்த விவரங்களை மட்டு ம் எழுதி வேண்டுகோள். கோரிக்கை எதுவுமின்றி அனுப்ப வேண்டும்,

2,0 நீங்கள்விரும்பினால். வாக்கு ச்சீட்டுக்கள் எண்ணும்பணிக்கு . வாக்கு எண்ணும் மேசைக்கு ஒருவர் வீதம் முகவர்களை  நியமிக்கலாம்,
21, வாக்கு எண்ணும் பணியை நீங்களோ அல்லது உங்கள் தேர்தல் முகவரோ நேரடியாக கண்காணிக்கலாம்,

22, வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களோ. அச்சுறுத்தல்களோ இன்றி வாக்குச் சேகரிக்கும் பணியைச் செய்ய வேண்டும்,
23, ஒருவரைத் தேர்தலில் போட்டியிடுவதனின்று தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்யவோ முறையற்ற வழிகளைக்கையாளக் கூ டாது, வாக்காளர் எவரையும் வாக்க ளிக்கச்  செய்வதற்காக  அல்லது  வாக்கு அளிப்பதினின்றும்  தடுப்பதற்காக எந்த ஒரு முறையற்ற செயலையும் செய்யக்கூடாது, சகவேட்பாளர் எவரையும் தேர்தலில் போட்டியிடுவதினின்றும் தவிர்ப்பதற்காக வேட்புமனுவைத் திரும்பப்பெற நிர்ப்பந்திக்கவோ அல்லது இதற்காக முறையற்ற செயல்களில் ஈடுபடவோ கூடாது,

24, நியாயமான. முறையான தேர்தல்கள்நடைபெறுவதற்கு உதவ வேண்டும்,

25, நேர்மையற்ற வழிகளிலும். முறையற்ற செயல்களிலும் ஈடுபட்டு . அமைதியாக நடக்கும் தேர்தல்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊறு விளைவிக்கக்கூடாது,

26, வாக்காளர்களின் மத இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளைத் தூண்டி வாக்கு அளிக்கச் செய்யவோ அல்லது வாக்கு அளிப்பதைத் தடுக்கவோ முயலக்கூ டாது,

27, சமய உணர்வுகளைத் தூண்டியோ அல்லது  சமயச் சின்னங்களைப் பயன்படுத்தியோ வாக்கு சேகரிக்கவோ  வேண்டுகோள் விடுக்கவோ கூடாது,

28, வாக்காளர்கள் மத்தியில் மத, இன. சாதி. வகுப்பு. மொழி போன்ற பாகுபாடுகளின் அடிப்படையில் விரோதத்தையும், வெறுப்பையும் வளர்த்து அதன் மூலமாக  வாக்குகள் பெறும் முயற்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூ டாது,

29, சக வேட்பாளர்களின் சொந்த விசயங்கள் மற்றும் அவர்களது  நடத்தை குறித்து பிரச்சாரம் எதுவும் மேற்கொள்வது கூடாது,

30 வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வாகனங்கள் எவற்றையும் வாடகைக்கு அமர்த்தவோ அல்லது  அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ கூடாது,

31, ஒவ்வொரு தேர்தலுக்கெனவும் நிர்ணயிக்க ப்பட்ட தேர்தல் செலவினங்களுக்கு மேல்செலவு செய்யக்கூடாது, அத்தேர்தல்களுக்குச் செலவழிக்கப்படும் தொகைக்கு முறைப்படி கணக்குகள் பராமரித்து கணக்குகளின் நகலை தேர்தல்முடிவு அறிவிப்பு செய்யப்பட்டதிலிருந்து 30 நாட்க ளுக்குள் உரிய அலுவலருக்கு குறிப்பிட்ட படிவத்தில்தாக்கல் செய்ய வேண்டும்,

32, அரசு அலுவலர்கள் எவரையும் வாக்குச் சேகரிப்பதற்கோ  அல்ல து வாக்காளர்க ளை ஈர்ப்பதற்கோ பயன்படுத்தக்கூடாது,
33, வாக்குச் சாவடிகளுக்குள்ளும் வாக்குச் சாவடியின் அண்மையிலும் முறையாக  நடந்து கொள்ள வேண்டும்,

34, வாக்குச்சாவடிக்கு உள்ளும் வெளியிலும் குழப்பத்தையோ அல்லது கலவரத்தையோ ஏற்படுத்தும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுதல் கூடாது,

35, வாக்கெடுப்புப் பகுதியில் வாக்கெடுப்பு முடிவடைவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக  தேர்தல் கூட்ட ங்கள் எதையும் நடத்தவோ. அல்லது அதற்கான ஏற்பாட்டைச் செய்யவோ கூடாது,
36, சக வேட்பாளர்களின் தேர்தல் கூட்டங்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ  இடையூறு எதுவும் விளைவிக்கக்கூ டாது,
37, வாக்குச்சாவடியின் 100 மீட்ட ர் சுற்றளவிற்குள் தேர்தல் நாளன்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது,
38, தேர்தல் நடத்து ம் அலுவலர் வெளியிடும் எந்த அறிவிப்பையும் முறையற்ற வழியில் திருத்துவதோ, மாற்றுவதோ. ஊறுவிளைவிப்பதோ, கிழிப்பதோ தேர்தல் குற்றம் ஆகும்,

39, வாக்குச்சீட்டை-வாக்குப் பதிவுகருவியினை வாக்குச் சாவடியிலிருந்து எடுத்துச் செல்வ தும் எடுத்துச் செல்ல உதவி செய்வதும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் குற்றமாகும்,

4,0 வாக்கு பதிவு இயந்திரத்தினை முறையற்ற வகையில் கையாள்வது அல்லது  சேதப்படுத்துவது அல்லது கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது  தவறாகும்,

41, வாக்குச்சாவடியின் சுவர்களிலோ அல்லது அதன் 100 மீட்டர் சுற்றுப் பகுதியிலோ எந்த விதமான தேர்தல் விளம்பரங்களும் செய்யக் கூடாது,
42, வாக்குப் பதிவிற்கு இடையூறாக செயல்படுவதும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் குற்றம் ஆகும்,

43, வாக்குப்பெட்டிக்கோ-வாக்குப்பதிவு கருவிக்கோ அல்ல து அவைகளின் மீதான  முத்திரைக்கோ, வாக்கெடுப்பு பணிகளுக்கோ பங்கம் விளைவிக்கக் கூடாது,

44, சகவேட்பாளர்கள் குறித்து தவறான எந்த ஒரு அறிவிப்பையும் அச்சிட்டோ அல்லது எழுதியோ வெளியிடுதல்கூடாது,

45, ஆள்மாறாட்டம் செய்வதை மறைமுகமாகவோ. நேரடியாகவோ ஊக்குவித்தல் கூடாது,

46, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்  எவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடையூறாகவோ அல்லது அச்சுறுத்துவதாகவோ  செயல்படுதல்கூடாது.

                      ********


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...