Monday, March 11, 2019

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறை என்னென்ன ?







ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்தக் குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப்புள்ளியாகும்.
சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகி றது.
ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளக் காவல் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.
எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்தக் குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.
புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிட ம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்றச் சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைப்பேசி எண் ஆகியவை முழுமையாகத் தரப்பட வேண்டும்.
பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்தக் காவல் நிலைய அதிகாரியைப் பெறுநராக குறிப்பிட வே ண்டும்.
காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல் நிலையத்தி ல் பணியாற்றும் காவல் துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்தப் புகாரை பரிசீலித்து முதல் தக வல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளைக் காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுக லாம். அதை பிறகு பார்ப்போம்).
குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவர ங்கள் புகாரில் இடம் பெற வே ண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டி யிருந்தால் அதைக் குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது.
தாக்குதல் நடந் திருந்தால் அந்தத் தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திரு ட்டு, கொள்ளைப் போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்க ளும் அளிக்கப் பட வேண்டும்.
இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறை க்கு மிகவும் உதவியாக இருக்கும். நம க்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்க ளுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி நபர்களைபெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்என்று தெளிவாக குறிப்பிடவே ண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்


No comments:

Post a Comment

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...